உருவக்கேலி, அடல்ட் நகைச்சுவை போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்த சந்தானம், அதை தவிர்த்து, நல்ல கதைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளார். அதன் தொடக்கமாக அமைந்ததுதான் ‘டைம் டிராவல்’ கதையாக வெளியான ‘டிக்கிலோனா’. தற்போது அவரது நடிப்பில் வெளியாக உள்ள ‘சபாபதி’ படத்தில், ‘விதி’ ஒரு கதாபாத்திரமாக வருகிறது என்கிறார் படத்தின் இயக்குநர் ஆர்.சீனிவாச ராவ்.
‘‘திக்குவாய் பிரச்சினையால் சமூகத்தில் நிராகரிக்கப்படும் ‘சபாபதி’ என்ற இளைஞனாக வருகிறார் சந்தானம். ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த‘லொள்ளு சபா’ மாறன் இதிலும் அட்டகாசம் செய்திருக் கிறார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், சந்தானத்தின் நண்பராகவும் எம்.எஸ்.பாஸ்கர் அப்பாவாகவும் நடித்துள்ளனர்’’ என்கிறார் இயக்குநர். :