தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ‘ஜாங்கோ’ என்ற படத்தை தயாரித்துள்ளார். அறிவழகன், ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ள மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார். சதீஷ்குமார் நாயகனாகவும், மிருணாளினி ரவி நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் அனிதா சம்பத், ஹரீஷ் பெரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக், டேனியல் என ஏகப்பட்ட நடிகர்கள்.
படம் பற்றி சி.வி.குமாரிடம் கேட்டபோது, “தமிழில் ‘டைம் டிராவல்’ படங்கள் நிறைய வந்தாலும், ‘டைம் லூப்’ எனப்படும் நேர வளையம் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து இதுவரை படம் வர வில்லை. அதை வெற்றிகரமாக, சுவாரஸ்யமாக ‘ஜாங்கோ’ மூலம் சாத்தியமாக்கி உள்ளோம். கதாநாயகனுக்கு ஒரே நாள் திரும்பத் திரும்ப 3 முறை வருகிறது. அதில் வரும் பிரச்சினைகளை எப்படி கையாள்கிறார் என்பது திரைக்கதை’’ என்றார். :