தமிழ் சினிமா

அனுஷ்காவின் ‘நிசப்தம்’ கலைந்தது

செய்திப்பிரிவு

வாய் பேசாத, காது கேளாத ஓவியர் கதாபாத்திரத்தில் ‘நிசப்தம்’ படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது ஓடிடியில் வெளியான அப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு, அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் 40-வது பிறந்தநாளை கொண்டாடிய அனுஷ்கா, தனது 48-வது படத்தை இயக்கும் வாய்ப்பை மகேஷ்பாபு என்ற புதுமுக இயக்குநருக்கு கொடுத்துள்ளார்.

இது 4 மொழிகளில் தயாராகிறது. பிரபாஸ் நடித்த ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ ஆகிய பிரம்மாண்ட படங்களை தயாரித்த யூவி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதே நிறுவனத்தின் தயாரிப்பில் அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ திரைப்படம் 4 மொழிகளில் வெளியாகி அதிக வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT