ஆல்பங்களுக்கு இசையமைத்து கவனம் பெற்று வருபவர் வி.ஆர்.ராஜேஷ். இவர் தற்போது திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். தவிர, யோகிபாபு, நடன இயக்குநர் தினேஷ் முதன்மை வேடங்களில் நடிக்க, எஸ்.பி.ராஜ்குமார் இயக்கும் புதிய படத்தை தயாரித்தும் வருகிறார்.
கரோனா ஊரடங்கு காலத்தின்போது, சென்னையில் ஆதரவின்றி அலைந்து திரிந்த மனநலம் குன்றியவர்களுக்கும், சாலையோரம் வசிக்கும் 100-க்கும் அதிகமான ஏழைகளுக்கும் 3 வேளை இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கிவந்த ராஜேஷ், தற்போது மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மேடை மெல்லிசைக் கலைஞர்கள் 3,500பேரின் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள் தொகுப்புகளை வழங்கியுள்ளார்.