ஜெயமோகன் எழுதிய கதைக்கு திரைக்கதை, வசனம் அமைத்து கவுதம் மேனன் இயக்கிவரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்துக்காக உடல் எடையை அதிரடியாக குறைத்து சிம்பு கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயடு லோஹர் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை, தாமரையின் வரிகள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இந்த படத்துக்கு ஹாலிவுட் சண்டை இயக்குநர் லீ விட்டேகர் அதிரடி சண்டைக் காட்சிகளை அமைத்துத் தர, தற்போது 3-ம்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்துவருகிறது. இதில் சிம்புவுக்கு வில்லனான நடிக்க, வளர்ந்து வரும் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.