‘பிகில்’ படத்துக்கு பிறகு, மலையாளம், கன்னடம், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்தார் ரெபா மோனிகா ஜான். ‘குட்டி பட்டாசு’ இசைக் காணொலியில் தோன்றி மேலும் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக இவர் நடித்துள்ள ‘எஃப்ஐஆர்’ படத்தில் இருந்து ‘பயணம்’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில் இவர் நடித்துவரும் ‘ஆகாஷ் வாணி’ இணையத் தொடருக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பென்னி குயிக் வரலாறு
முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கை அப்பகுதி மக்கள் கடவுள்போல வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க விரும்புவதாக இயக்குநர் சீனு ராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.