பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க, புதிய படத்தின் பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்த், வி.டி.வி.கணேஷ், கருணாஸ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து 'ப்ரூஸ்லீ' மற்றும் ராஜேஷ் இயக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஜி.வி.பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' பாணியில் முழுக்க காமெடி கதைகளத்தில் பாண்டிராஜ் உருவாக்கி இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும், பாண்டிராஜ் கூறிய கதை ஜி.வி.பிரகாஷிற்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் தெரிவித்தார்கள்.