பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள ‘தேசிய தலைவர்’ படத்தின் அறிமுக விழா, அவரது 114-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நேற்று நடந்தது. அதில், முத்துராமலிங்கத் தேவராக நடித்துள்ள ஜே.எம்.பஷீர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இப்படத்தில் பாரதிராஜா, ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை 'ஊமை விழிகள்' படப் புகழ்ஆர்.அரவிந்தராஜ் இயக்கியுள்ளார்.