‘அண்ணாத்த’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா சாமி’ பாடலை எழுதி கவனிக்க வைத்திருக்கிறார் வளர்ந்துவரும் பாடலாசிரியர் அருண்பாரதி. அந்த பாடலை எழுதிய அனுபவம் பற்றி கேட்டபோது, ‘‘முருகன், விநாயகர், சிவன், கிருஷ்ணன் போன்ற கடவுள்களுக்கு சினிமாவில் நிறைய பாடல்கள் உள்ளன. ஆனால், கருப்பசாமி, சுடலைமாடன் சாமி, மதுரை வீரன் சாமி போன்ற சிறு தெய்வங்கள் குறித்து கால் நூற்றாண்டாக சினிமாவில் பெரிதாக பாடல்கள் இல்லை. இந்நிலையில், அந்த சிறு தெய்வங்களுக்கான பாடலாக இருக்கும் என்று நினைத்து இதை எழுதியுள்ளேன். ரஜினி மற்றும் அவரவர் குலதெய்வம் - இந்த இருவருக்கும் பொருந்துவதுபோல, இந்த பாடலுக்கு இருவேறு பரிமாணங்கள் இருக்கவேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளேன்’’ என்கிறார் பாடலாசிரியர் அருண்பாரதி.