தமிழ் சினிமா

புனித் ராஜ்குமார் மறைவு: அஜித் இரங்கல்

செய்திப்பிரிவு

புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். 'பவர் ஸ்டார்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இன்று (அக்டோபர் 29) காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னடத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் அஜித் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், "புனித் ராஜ்குமாரின் அகால மரணச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்தத் துயரைக் கடக்கும் வலிமை கிட்டட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT