தமிழ் சினிமா

கணிதன் தெலுங்கு ரீமேக்கில் ஆர்வம் காட்டும் ரவிதேஜா

ஸ்கிரீனன்

அதர்வா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கணிதன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ரவிதேஜா ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில் வெளியான படம் 'கணிதன்'. அதர்வா, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்திருந்தார். தாணு தயாரிப்பில் இப்படம் வெளியானது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய குறையில்லாமல் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

சான்றிதழ் மோசடி பின்னணியில் கதை மற்றும் திரைக்கதை அமைத்திருந்ததால், எந்த மொழியிலும் இக்கதையை ரீமேக் செய்ய முடியும். எனவே, முதலில் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

'கணிதன்' தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர் ரவிதேஜா ஆர்வம் காட்டியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழில் இருந்த சில காட்சிகளை நீக்கி, படத்தின் நேரத்தை குறைக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் சந்தோஷ்.

மேலும், தெலுங்கு திரையுலகிற்கு ஏற்றவாறு சில காட்சிகளை மாற்றி, பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். 'கணிதன்' படத்தின் இந்தி ரீமேக்கும் பேச்சுவார்த்தையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT