விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘தெறி’ படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமை ரூ.3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படத்தின் அமெரிக்க உரிமையை சினி கேலக்சி நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறியிருப்பதாவது:
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ படத்தின் அமெரிக்க உரிமையை ரூ.3 கோடிக்கு வாங்கியுள்ளோம். ஏப்ரல் 14ம் தேதி அமெரிக்காவில் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து படத்தின் தயாரிப் பாளர் எஸ்.தாணு கூறும்போது, “ சினி கேலக்சி நிறுவனம் ‘தெறி’ படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இத் திரைப்படம் அங்கே ரூ.3 கோடிக்கு மேல் வசூலிக்கும் பட்சத்தில் இரு நிறுவனங்களும் 50 சதவீத பங்கீடு கணக்கில் உரிமையை கொடுத்துள்ளோம்’’ என்றார்.