தமிழ் சினிமா

மிலந்த் ராவ் இயக்கத்தில் ராணா: அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திப்பிரிவு

மிலந்த் ராவ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக ராணா நடிக்கவுள்ளார்.

'காடன்' படத்துக்குப் பிறகு 'விராட பர்வம்', 'பீம்லா நாயக்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ராணா. அதைத் தொடர்ந்து நடிப்பதற்கு பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்.

'அவள்', 'நெற்றிக்கண்' ஆகிய படங்களின் இயக்குநர் மிலந்த் ராவ் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்க ஒப்பந்தமானார் ராணா. இது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகிறது.

இந்தப் படத்தை கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும் ராம்பாபு சோடிஷெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். 2022-ம் ஆண்டு இதன் பணிகள் தொடங்கவுள்ளன.

SCROLL FOR NEXT