தமிழ் சினிமா

டெல்லியில் நடைபெறும் ‘2.0’ படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்பு

செய்திப்பிரிவு

டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ‘2.0’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

பிரபல இயக்குநர் சங்கர், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான எந்திரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக எந்திரன் 2 திரைப்படத்தை இயக்க சங்கர் திட்டமிட்டார்.

பின்னர் இதன் பெயர் 2.0 என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதில் ரஜினிகாந்த், நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக் ஷய் குமார் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, “2.0 படப்பிடிப்புக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை டெல்லி வந்தார். நேற்று நடந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும், மொராக்கோ நாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார்” என்றனர்.

SCROLL FOR NEXT