தமிழ் சினிமா

ராம் - நிவின் பாலி படப்பிடிப்பு தொடக்கம்

செய்திப்பிரிவு

ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் 'பேரன்பு'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு, பல்வேறு கதைகளைத் தயார் செய்துவந்தார் இயக்குநர் ராம்.

அதில் ஒரு கதையில் நிவின் பாலி நடிப்பது உறுதியானது. இதனை சுரேஷ் காமாட்சி தயாரிக்க முன்வந்தார். அதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டன. இதில் சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

நேற்று (அக்டோபர் 4) முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT