தமிழ் சினிமா

'லிஃப்ட்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'லிஃப்ட்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லிஃப்ட்'. ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது.

இந்தப் படத்தின் வெளியீடு குறித்து இரண்டு நிறுவனங்களுக்கும் மோதல் உருவானது. இதனிடையே, திரையரங்க வெளியீட்டிலிருந்து பின்வாங்கி ஓடிடியில் வெளியாகவுள்ளது.

'லிஃப்ட்' படத்தின் நேரடி டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (செப்டம்பர் 24) படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT