தமிழ் சினிமா

'தள்ளிப் போகாதே' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'தள்ளிப் போகாதே' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தள்ளிப் போகாதே'. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. பலமுறை வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டு, கரோனா அச்சுறுத்தல் காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

தற்போது அக்டோபர் 14-ம் தேதி ஆயுதப் பூஜை விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு வெளியாகவுள்ளது 'தள்ளிப் போகாதே'. இதனைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக கோபி சுந்தர், பாடல்கள் மற்றும் வசனம் கபிலன் வைரமுத்து, எடிட்டராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இது தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'நின்னு கோரி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT