'பிரண்ட்ஷிப்' படக்குழுவுக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜே.பி.ஆர் - ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் 'பிரண்ட்ஷிப்'. இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்காகக் காத்திருந்தது. கரோனா அச்சுறுத்தலால் ஓடிடிக்குப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் இப்படம் நாளை (செப். 17) வெளியாகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
''பஜ்ஜி பா... என் அண்ணாத்த! 'பிரண்ட்ஷிப்' ட்ரெய்லர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு. படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது. 'பிரண்ட்ஷிப்' படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க''.
இவ்வாறு சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.