விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரமே வாகை சூடும்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
தற்போது, டிசம்பரில் 'வீரமே வாகை சூடும்' வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அக்டோபர், நவம்பரில் பல்வேறு படங்கள் வெளியாகவிருப்பதால், டிசம்பர் மாதத்தைத் தேர்வு செய்துள்ளது படக்குழு. ஆனால், இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை.
இந்தப் படத்தின் நாயகியாக டிம்பில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார்.