தமிழ் சினிமா

'அண்ணாத்த' ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது

செய்திப்பிரிவு

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு இன்னும் வெளியிடவில்லை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளது என்று தகவல் பரவியது. அதே போல் நாளை (செப்டம்பர் 10) காலை 11 மணிக்கு 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. அதே போல் மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது.

'அண்ணாத்த' படக்குழுவினரின் இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

          
SCROLL FOR NEXT