கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான ஈக்கோ (பசுமை சார்ந்த) ஹாரர் த்ரில்லர் திரைப்படம் ‘பூமிகா’. இப்படத்தில் இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரோபர்ட்டோ ஜஜ்ஜாரோவின் ஒளிப்பதிவு மிகவும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது இப்படம்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள பிரித்வி சந்திரசேகரின் இசையும் ‘உலகத் தரம்’ என்ற வரவேற்பை பெற்று வருகிறது.
காடு சார்ந்த பின்னணியை கதைக்களமாக கொண்ட இப்படத்துக்கு இயற்கையின் பிரம்மாண்டம் வெளிப்படும் விதமாக பின்னணி இசை அமைத்த இவர், பல புதுமையான ஒலி தொகுப்புகளை உருவாக்கி இப்படத்துக்கு பயன்படுத்தியதை சமூக வலைதளங்கள் பாராட்டி வருகின்றன.