தமிழ் சினிமா

விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2 கதைக்களம்: கெளதம் மேனன் விவரிப்பு

ஸ்கிரீனன்

'விண்ணைத்தாண்டி வருவாயா' 2ம் பாகத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் விழா ஒன்றில் பேசியிருக்கிறார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படத்தை மதன், எல்ரெட் குமார், ஜெயராமன் இணைந்து தயாரித்தார்கள்.

தமிழ் திரையுலகில் காதலர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. தற்போது வரை இப்படத்தின் பாடல்களுக்கு வரவேற்பு இருக்கிறது.

இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஜாஸ் சினிமாஸில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரையிட இருக்கிறார்கள். இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் 2ம் பாகம் குறித்த தனது எண்ணம் குறித்து விழா ஒன்றில் பேசியிருக்கிறார் கெளதம் மேனன். "'விண்ணைத்தாண்டி வருவாயா' 2ம் பாகத்தில் 4 நாயகர்கள் இருப்பார்கள், அதில் சிம்பு ஒருவராக இருப்பார்.

டிசம்பர் மாதம் முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். அப்படத்தில் கார்த்தி மறுபடியும் ஜெஸ்ஸியை 7 ஆண்டுகள் கழித்து சந்திப்பது தான் கதைக்களமாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT