சமூக பார்வைக்கான எடிசன் திரை விருது, ‘கத்துக்குட்டி’ படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
9-வது எடிசன் விருது விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப் பாளர் என்பது உட்பட 21 பிரிவு களில் திரையுலகினருக்கு விருது கள் வழங்கப்பட்டன. ‘வேதாளம்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்கள் அதிக அளவில் விருதுகளைப் பெற்றன.
சமூக பார்வைக்கான விருது, நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு வழங்கப்பட்டது. மீத்தேன் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையை மையமாக வைத்து உருவான ‘கத்துக்குட்டி’ படத்தில் நடித்த தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியபோது, ‘‘கிராமம்தான் ‘கத்துக்குட்டி’ படத் தின் ஜீவனாக இருந்தது. இயற்கை யோடு இயைந்து நிம்மதியான வாழ்க்கை வாழும் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனால், சமூக விழிப் புணர்வு பார்வைக்கான விருது எனக்கு கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரத்தை கனவாக சுமந்து அதற்கு உயிர் கொடுத்து சிறப்பாக படத்தை எடுத்த இயக்குநர் இரா.சரவணனுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்’’ என்றார்.