விமல், சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் 'மாப்ள சிங்கம்' திரைப்படம் மார்ச் 11ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
ராஜசேகர் இயக்கத்தில் விமல், சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மாப்ள சிங்கம்'. ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருது வருகிறது. இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
தற்போது இப்படம் மார்ச் 11ம் தேதி வெளியாகும் என்று எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது.