மணிமாறன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் 'புகழ்' திரைப்படம் மார்ச் 18ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'புகழ்'. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜா இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கினார்கள்.
இப்படத்தைப் பார்த்த ஐங்கரன் நிறுவனம், இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பல்வேறு படங்கள் வெளிவருவதால் சரியான தேதிக்காக காத்திருந்தார்கள்.
தற்போது இப்படத்தை மார்ச் 18ம் தேதி வெளியிட ஐங்கரன் நிறுவனம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.