தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் தோனி - விஜய்யுடன் திடீர் சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பின் இடையே, விஜய்யை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சந்தித்துப் பேசியுள்ளார்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

ஜார்ஜியாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பின்னர் சென்னையில் 2-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பாடல் ஒன்றும், சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. தற்போது சென்னையிலேயே 3-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பின் இடையே விஜய்யை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சந்தித்துப் பேசியுள்ளார்.

தற்போது ஒரு விளம்பரப் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ளார் தோனி. அவர் நடிக்கும் விளம்பரப் படப்பிடிப்பு அரங்குக்கு அருகேதான் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பும் நடந்து வருகிறது. எனவே படப்பிடிப்புக்கு இடையே ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு அரங்குக்குச் சென்ற தோனி, விஜய்யைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தோனி மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் விஜய். சில ஆண்டுகளுக்கு முன்பு சிஎஸ்கே பங்கேற்கும் டி20 போட்டிகளில் தன் மகனுடன் கலந்துகொள்வது விஜய்யின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT