'போக்கிரி ராஜா' படத்தை 50 பேருக்கு திரையிட்டு காட்டி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு படத்துக்கு இறுதிவடிவம் கொடுத்திருக்கிறார்கள்.
'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. ஜீவாவுடன் நாயகியாக ஹன்சிகா, வில்லனாக சிபிராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.டி.செல்வக்குமார் தயாரித்திருக்கிறார். ஜீவா நடிப்பில் வெளியாகும் 25வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படத்தின் இறுதி வடிவம் கொடுப்பதற்கு முன்பு பொதுமக்கள் 50 பேரிடம் இப்படத்தைப் போட்டு காட்டியிருக்கிறார்கள். இரண்டு இரண்டு பேராக அழைத்துச் சென்று படத்தை காண்பித்து, அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு இறுதிவடிவத்தை உறுதி செய்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
'போக்கிரி ராஜா' திரைப்படத்தை மார்ச் 4 தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு படக்குழு பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது.