தமிழ் சினிமா

திரையுலகில் 30-வது ஆண்டு: வாழுங்கள், வாழ விடுங்கள்: அஜித்

செய்திப்பிரிவு

திரையுலகில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அஜித் குறுந்தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அவர் திரையுலகில் 29 ஆண்டுகள் நிறைவு செய்து, 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தான் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு அஜித் குறுந்தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என் ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரே நாணயத்தின் மூன்று பகுதிகள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், பாரபட்சமில்லாத விமர்சனங்களை நடுநிலையாளர்களிடமிருந்தும் முழு மனதாக அன்புடன் ஏற்கிறேன். வாழுங்கள், வாழ விடுங்கள். என்றும் நிபந்தனையற்ற அன்புதான்".

இவ்வாறு அஜித் தெரிவித்துள்ளார்.

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதனை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT