மாதுரி 
தமிழ் சினிமா

ஆதியின் ‘அன்பறிவு’

செய்திப்பிரிவு

ஹிப்ஹாப் ஆதி நடித்து, இயக்கியுள்ள ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் முழு பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கணினித் துறை பின்னணியில் நகைச்சுவை, காதல் கலந்த கலகலப்பான இப்படத்தில் நாயகியாக மாதுரி நடிக்கிறார். தமிழில் இவருக்கு இது முதல் திரைப்படம். இதில் நாயகனாக ஆதி நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து, தற்போது ‘அன்பறிவு’ படத்தின் படப்பிடிப்பில் ஆதி கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள சூழலில், அடுத்தகட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டு, அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT