நிவின் பாலி 
தமிழ் சினிமா

நாயகி இல்லாத படம்!

செய்திப்பிரிவு

வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அடுத்து ராம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகளை செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்க உள்ளார். இதில் நிவின்பாலி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சூரியும் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். அவர்கள் இருவர் உட்பட 4 கதாபாத்திரங்களை மையமாக வைத்து படத்தின் பெரும்பகுதி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகி இல்லை. கதை கேட்டபோதே கதைக்களமும், தனது கதாபாத்திரமும் வித்தியாசமாக இருப்பதை அறிந்த சூரி, தானே ஆர்வத்தோடு முன்வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இயக்குநர் ராம் உருவாக்கியுள்ள அந்த கதாபாத்திரம் தன்னை வெகுவாக ஈர்த்தது என்கிறார் சூரி.

SCROLL FOR NEXT