'சார்பட்டா பரம்பரை' படக்குழுவினருக்கு சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
பல்வேறு திரையுலக பிரபலங்களும் 'சார்பட்டா பரம்பரை' படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். படக்குழுவினரைப் பாராட்டும் வகையில் சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'சார்பட்டா பரம்பரை' இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலைத் திரை அனுபவமாக மாற்ற இயக்குநரும், நடிகர்களும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது! வாழ்த்துகள்!! அற்புதமான பணி".
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுடன் படக்குழுவினரின் ட்விட்டர் பக்கங்களையும் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.