தமிழ் சினிமா

மிருதன் வசூலைக் குவித்ததில் மகிழ்ச்சி: படக்குழு

ஸ்கிரீனன்

தமிழ்நாட்டில் ரூ.10.66 கோடியும், உலகளவில் ரூ.20.13 கோடியும் 'மிருதன்' வசூல் செய்திருப்பதாக ஐங்கரன் நிறுவனம் அறிவித்திருந்தது.

சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'மிருதன்'. லட்சுமி மேனன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

பிப்ரவரி 19-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், பெரும் வசூல் செய்திருக்கிறது. "தமிழ்நாட்டில் முதல் வாரத்தில் ரூ.10.66 கோடியும், தமிழ்நாட்டு வசூல் இணைத்து உலகளவில் ரூ.20.13 கோடி வசூல் செய்திருப்பதாக ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது" என்று சந்தோஷத்துடன் தெரிவித்திருக்கிறார் ஜெயம் ரவி.

'மிருதன்' படத்தைத் தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

SCROLL FOR NEXT