தமிழ் சினிமா

'காசேதான் கடவுளடா' ரீமேக்கில் இணைந்த புகழ்

செய்திப்பிரிவு

'காசேதான் கடவுளடா' ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க புகழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. 1972ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

இந்தப் படத்தின் ரீமேக் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க புகழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

'காசேதான் கடவுளடா' ரீமேக்கின் இசையமைப்பாளராக கண்ணன், ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT