தமிழ் சினிமா

அக்டோபரில் தொடங்கும் 'தல 61' படப்பிடிப்பு?

செய்திப்பிரிவு

அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'. போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளிநாட்டில் ஒரே ஒரு சண்டைக்காட்சியை மட்டும் படமாக்கத் திட்டமிட்டு வருகிறது படக்குழு.

'வலிமை' படத்தினை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 'வலிமை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் - அஜித் - போனி கபூர் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

இது அஜித் நடிப்பில் உருவாகும் 61-வது படமாகும். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பை அக்டோபரில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

'வலிமை' படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பு முடிந்து திரும்பியவுடன், 'தல 61' பணிகளில் தீவிரம் காட்டவுள்ளார் ஹெச்.வினோத். அக்டோபரில் படப்பிடிப்பு திட்டமிட்டு இருந்தாலும், கரோனா 3-ம் அலை பொறுத்தே அமையும் எனத் தெரிகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT