தமிழ் சினிமா

மீண்டும் பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த்?

செய்திப்பிரிவு

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக சித்தார்த் நடிக்கவுள்ளார்.

பாலாஜி மோகன் இயக்குநராக அறிமுகமான படம் 'காதலில் சொதப்புவது எப்படி?'. இந்தப் படத்தில் நாயகனாக நடித்தது மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் சித்தார்த். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு 'வாயை மூடி பேசவும்', 'மாரி', 'மாரி 2' உள்ளிட்ட படங்களை இயக்கினார் பாலாஜி மோகன். இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கு தயாராகி வந்தார். அந்தக் கதையில் சித்தார்த் நடிப்பது உறுதியாகியுள்ளது.

சித்தார்த் - பாலாஜி மோகன் இணையும் கதையினை ஓய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்போது சித்தார்த்துடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவித்து படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

SCROLL FOR NEXT