தமிழ் சினிமா

எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் சட்டப்படி ரத்து: நடிகர் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த நிர்வாகத்தால் நடிகர் சங்க அறக்கட்டளை மூலம் 2010-ல் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப் பட்டது. அதை எதிர்த்து சங்க உறுப்பினர் பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர்களான நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். அது நிறைவேறாததால் தேர்தலிலும் பாண்டவர் அணி மூலம் நின்று வெற்றி பெற்றோம்.

நாங்கள் பதவிக்கு வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தனியார் நிறுவனத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். முடி வில் அந்த ஒப்பந்தத்துக்காக கொடுக் கப்பட்ட ரூ.48 லட்சம் மற்றும் பத் திரப்பதிவுக்காக கொடுக்கப்பட்ட 1 கோடியே 41 லட்சம், கடந்த 2 வரு டங்களாக நடிகர் சங்க அலுவலுக்கு மாதாந்திர செலவுகளுக்கு கொடுக் கப்பட்ட சுமார் ரூ.60 லட்சம் ஆகிய வற்றை சேர்த்து 2 கோடியே 48 லட்ச ரூபாயை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழுவில் இதற்கு ஒப்புதல் வாங்கப்பட்டது. தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT