தமிழ் சினிமா

அஸ்வினுக்கு நாயகியாக தேஜ் அஸ்வினி ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் அஸ்வினுக்கு நாயகியாக தேஜ் அஸ்வினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். தற்போது நாயகனாக அறிமுகமாகவுள்ளார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'என்ன சொல்ல போகிறாய்' என்று தலைப்பிட்டுள்ளனர்.

ஹரிஹரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தற்போது அஸ்வினுக்கு நாயகியாக தேஜ் அஸ்வினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இணையத்தில் பெரும் வைரலான 'அஸ்கு மாரோ' படத்தில் கவினுடன் நடனமாடியவர் தேஜ் அஸ்வினி என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைச் சுற்றியே ஒட்டுமொத்தப் படத்தையும் படமாக்கி முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT