பாக்கியம்மா 
தமிழ் சினிமா

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் புகழ் பாடகி பாக்கியம்மா மறைவு

செய்திப்பிரிவு

‘என்ஜாய் எஞ்சாமி’பாடலில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தஒப்பாரி பாடகி பாக்கியம்மா, கடந்த வியாழக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

ஒப்பாரி பாடல்களைபாடுவதில் வல்லவரான பாக்கியம்மாசிறந்த ஆட்டக் கலைஞராகவும் இருந்தார். பின்னணி பாடகர் அறிவு மற்றும் பாடகி தீகூட்டணியில் வெளியாகி பெரும் கவனத்தைஈர்த்த ‘என்ஜாய் எஞ்சாமி’ என்ற பாடலில் பாக்கியம்மாவும் நடித்திருந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் சென்னை மியூசிக் அகாடெமியில் முதன்முறையாக ஒப்பாரி நிகழ்ச்சியை தனதுகுழுவினருடன் இவர் அரங்கேற்றி உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியம்மாவுக்கு கடந்த வியாழனன்று திடீர்உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வேலூர் அருகேஉள்ள அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாடகர் அறிவு, “ஒப்பாரி பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர் பாக்கியம்மா. 2 நாட்களுக்கு முன்புகூடஒருஇசை நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வருவதாகஇருந்தார். அவரது மறைவு எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT