தமிழ் சினிமா

இறுதிகட்டப் படப்பிடிப்பில் மனிதன்

ஸ்கிரீனன்

அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'மனிதன்' திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, விவேக், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மனிதன்'. மதி ஒளிப்பதிவு செய்து வரும் படத்தை அஹ்மத் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் அஹ்மத, "உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பாதி நீதிமன்றத்தை சார்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

பெரும் பொருட்செலவில் நீதிமன்ற வளாகமும், சென்னையில் உள்ள மண்ணடி தெருவை பிரதிபலிக்கும் விதமாக தெருவில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களையும், முன்னணி நடிகர், நடிகைகளையும் கையாண்டது சவாலனாதாக இருந்தது. படத்தின் இறுதி பிரதியை பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது" என்று தெரிவித்திருக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை, சாலக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT