தமிழ் சினிமா

மீண்டும் நூறு நாட்கள் கண்ட எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்

செய்திப்பிரிவு

கடந்த 2012-ஆம் ஆண்டு, டிஜிட்டல் முறையில் மறு வெளியீடு செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற 'கர்ணன்' திரைப்படத்தைத் தொடர்ந்து, 1965-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படமும் சில மாதங்களுக்கும் முன் மறு வெளியீடு செய்யப்பட்டது.

சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படத்தை வெளியிட்ட திவ்யா ஃபிலிம்ஸ் நிறுவனத்தினரே, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தையும் வெளியிட்டனர். கர்ணனுக்கு அளித்த ஆதரவைப் போலவே, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் சிறப்பாக ஓடி, நூறு நாட்களை இப்போது வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

இன்று நடிக்கும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்பட வெளியீட்டைப் போலவே, எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த 100 நாள் விழாவைப் பார்த்தனர். படப்பெட்டியை எழும்பூரில் இருக்கும் ஒரு அம்மன் கோவிலில் வைத்து சிறப்புப் பூஜை செய்து, பின் அதை அரங்கிற்கு எடுத்துச் சென்றனர். இதோடு, எம்ஜிஆரின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், பட்டாசு என இந்த நூறாவது நாள் ஒரு திருவிழாவைப் போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

SCROLL FOR NEXT