தமிழ் சினிமா

ராம் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி?

செய்திப்பிரிவு

ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் நாயகனாக ஆர்.ஜே. பாலாஜி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. 'மூக்குத்தி அம்மன்' படத்தின் திரைக்கதையை எழுதியதுடன், என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கினார். தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்கைத்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாகப் படக்குழுவினர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ராம் இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஆர்.ஜே. பாலாஜியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இது தொடர்பான சந்திப்புகளும் நடைபெற்றுள்ளன. ஆனால், இறுதிக்கட்டக் கதை விவாதம் மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே இந்தக் கூட்டணி இணைவது தொடர்பான ஒரு முடிவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT