தமிழ் சினிமா

பாண்டியன் ரீமேக்கை இயக்குகிறேனா?- மறுக்கும் இயக்குநர் சுராஜ்

ஸ்கிரீனன்

ஆர்யா நடிக்க 'பாண்டியன்' படத்தை ரீமேக் பண்ணவில்லை என்று இயக்குநர் சுராஜ் தெரிவித்தார்.

1992ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கி, தயாரித்த படம் 'பாண்டியன்'. பஞ்சு அருணாச்சலம் எழுதிய அக்கதையில் ரஜினி, குஷ்பு, ஜெயசுதா, ஜனகராஜ், டைகர் பிரபாகர், சரண்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசையமைத்த இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தின் ரீமேக் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன.

சமீபத்தில் கூட லட்சுமி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றிருப்பதாகவும் ஆர்யா நடிக்கவிருக்கும் அப்படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இச்செய்தி குறித்து இயக்குநர் சுராஜிடம் கேட்ட போது, "’பாண்டியன்’ படம் குறித்து வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை. ஒரு முன்னணி நடிகர் நடிக்கவிருக்கும் படத்தை நான் இயக்குவது உறுதியாகி இருக்கிறது. அதற்காக கதை எழுதி முடிக்கும் பணியில் இருக்கிறேன். விரைவில் அனைத்தும் முடிவானவுடன் அறிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT