தமிழ் சினிமா

5-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி

செய்திப்பிரிவு

சீனு ராமசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'இடம் பொருள் ஏவல்', 'மாமனிதன்' ஆகிய படங்களின் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. ஆனால், இரண்டு படங்களின் வெளியீடு குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இதனிடையே, தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார் சீனு ராமசாமி. இதில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார். இதனை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமி நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார்.

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி இணையவுள்ள படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. 'தென்மேற்குப் பருவக்காற்று', 'தர்மதுரை', 'இடம் பொருள் ஏவல்', 'மாமனிதன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 5-வது முறையாக இணையவுள்ளது.

தாணு தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. இதில் ஒரு படத்தைத்தான் சீனு ராமசாமி இயக்கவுள்ளார். மற்றொரு படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

SCROLL FOR NEXT