நடிகை ஷ்ரித்தா ராவ், ‘கும்கி 2’படம் வழியே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இதற்கிடையில், இயக்குநர் மிஷ்கின் தயாரிப்பில் உருவாகிவரும் ‘பிதா’, விதார்த்துடன் ஒரு படம் ஆகியவற்றிலும் நடிக்கிறார். இவரது நடிப்பில் உருவாகிவரும் அனைத்து படங்களும் ஒரு பகுதி படமாக்கப்பட்டுவிட்டன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீங்கிய பிறகு, தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்கிடையில், பல கதைகளும் கேட்டு வருகிறார். ‘‘தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிப்பதில்தான் ஆர்வம் உள்ளது.ஆரம்பத்திலேயே பெரிய நிறுவனங்கள், இயக்குநர்களின் படங்கள் அமைவது எனக்கு கிடைத்த வரம்’’ என்கிறார் சென்னைவாசியான ஷ்ரித்தா ராவ்.