சாய் பிரியாங்கா ரூத் 
தமிழ் சினிமா

பெண் கதைக் களத்தில் சாய் பிரியங்கா

செய்திப்பிரிவு

தமிழில் ‘கேங் ஆஃப் மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். ‘மெட்ரோ’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ நெடுந்தொடரில் நித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை கவர்ந்தார்.

தெலுங்கில் ‘இன் தி நேம் ஆஃப் காட்’ என்ற வெப்சீரிஸில் நாயகியாக நடித்துள்ளார். பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து உருவாக்கிவரும் ‘இரவின் நிழல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘பயமறியா பிரம்மை’ என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. இவ்வளவுக்கும் இடையே, பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு படத்திலும் நடிக்கிறார். ‘‘பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் என்றால் எனக்கு உயிர். அந்த கதைக் களத்துக்காக காத்திருந்தேன். சமீபத்தில் அதுபோல ஒரு படமும் அமைந்துவிட்டது. அதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்’’ என்கிறார் சாய் பிரியங்கா ரூத்.

SCROLL FOR NEXT