தமிழ் சினிமா

இயக்குநர் விஜய் - அமலாபால் திருமண நிச்சயதார்த்தம்: கொச்சியில் நடந்தது

செய்திப்பிரிவு

இயக்குநர் விஜய்- நடிகை அமலாபால் திருமண நிச்சயதார்த் தம் கொச்சியிலுள்ள ஜெயின் ஜூஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை மாலை நடந்தது.

‘கிரீடம்’, ‘மதராசப்பட்டிணம்’, ‘தலைவா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் விஜய். அவர் இயக்கிய ‘தெய்வத் திருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் நடித்தபோது நடிகை அமலாபாலுக்கும் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருமண நிச்சயதார்த்தத்தை கிறிஸ்தவ முறைப்படியும், விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணத்தை இந்து முறைப்படியும் நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டனர்.

அதன்படி, விஜய்- அமலாபால் திருமண நிச்சயதார்த்தம் சனிக் கிழமை மாலை கொச்சியில் உள்ள ஜெயின் ஜூஜ் தேவாலயத் தில் நடந்தது. கிறிஸ்தவ முறைப் படி இயக்குநர் விஜய் அமலா பால் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவருடைய மனைவி சைந்தவியுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி 12ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT