தமிழ் சினிமா

கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் ரஜினிகாந்த்: ட்விட்டரில்  மகள் சவுந்தர்யா பகிர்வு

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் இன்று (மே 13) கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இத்தகவலை புகைப்படத்துடன் அவரது இளைய மகள் சவுந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்தார். படப்பிடிப்பு முடிந்து நேற்று அவர் சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில், இன்று அவர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அவருக்கு பிபிஇ பாதுகாப்புக் கவசம் அணிந்தபடி வந்திருந்த மருத்துவப் பணியாளர் தடுப்பூசி செலுத்துவது புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் ரஜினிகாந்த் எந்தத் தடுப்பூசி எடுத்துக் கொண்டார் என்பது தெரியவில்லை.

ஆனால், தந்தை தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாம் ஒன்றாக இணைந்து இந்த கரோனா தொற்றுக்கு எதிரான போரை வென்றெடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT