தமிழ் சினிமா

முதல்வராகப் பதவியேற்ற ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து

செய்திப்பிரிவு

தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடந்தது. இதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின் இன்று (மே 7) காலை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்குத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

"பதவியேற்றுக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அரசாங்க உத்தரவுகளை, குறிப்பாகத் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக்குத் தமிழக அரசின் காப்பீடும், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கிற அறிவிப்பையும் நான் பாராட்டுகிறேன்" என்று இயக்குநர் ஷங்கர் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT