தமிழ் சினிமா

தளபதி 65 படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

செய்திப்பிரிவு

விஜய் 65 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், சென்னையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

9ஆண்டுகள் இயக்குநர் கமலிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷைன் டாம் சாக்கோ 2011ஆம் ஆண்டு வெளியான ‘காடம்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஈ அடுத்த காலத்து’, ‘அன்னையும் ரசூலும்’, ‘சாப்டர்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT