தமிழ் சினிமா

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

நடிகை பூஜா ஹெக்டே, தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தேசிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்குத் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர். தற்போது பூஜா தனக்கு கரோனா தொற்று இருப்பது குறித்துப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்த பதிவில், "அனைவருக்கும் வணக்கம். எனக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி வருகிறேன். வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 'மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்', 'ராதே ஷ்யாம்', 'ஆச்சார்யா', விஜய்யுடன் 'தளபதி 65' ஆகிய திரைப்படங்களில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். விஜய் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இதில் பூஜா ஹெக்டே பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT